11 Mar 2017

தெறி


தெறி
இஷ்டப்படி எழுதி
இறுதியில் இட்டால்
எல்லாவற்றையும்
மாற்றி விடும்
தலைப்பு!

கதை முடிந்தால்
வந்து விடும்
பக்குவம்!

இதற்கு மேல் முடியாது
என்றால்
இவ்வளவு நேரம்
இருந்ததற்குப் பெயர்தான்
பொறுமை என்பார்கள்
விவஸ்தை கெட்டவர்கள்!

விளக்கிக் கொண்டு இருப்பவர்கள்
விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள்
பொறுமையை!

நான் செத்தால் புரியும்
என்பவர்கள்
சாவுக்குப் பயந்தவர்கள்!

எமனை எதிர்ப்பதில்லை
மரணத்தை
வெல்பவர்கள்!
*****

No comments:

Post a Comment