11 Mar 2017

இருக்க மாட்டேன்!


கடி
நாய் கடித்து விட்டுப் போட்டதால், வேறு செருப்பு வாங்கிய சேகருக்கு புது செருப்பு கடித்தது.
*****
கிளாஸ்
கஷ்டப்பட்டு படித்து அதற்குப் பலனாக அமெரிக்காவில் செட்டிலான பத்மநாபன் அங்கு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.
*****
இருக்க மாட்டேன்!
"இனிமே இந்த ஊரிலே இருக்க மாட்டேன்!" என்ற முருகன் இறக்கும் வரை அந்த ஊரில்தான் இருந்தான்.
*****

No comments:

Post a Comment