23 Mar 2017

ஆணவக் கொலை


ஆணவக் கொலை
அந்தோ பரிதாபம்!
காவிரிக்கு நடந்தது
கர்நாடகாவில்
ஆணவக் கொலை!
*****
மகிழ்ச்சி
வராத காவிரி குறித்து
மகிழ்ச்சியே
எம் ஊர் கான்ட்ராக்ட்காரருக்கு
முப்போகம்
மணல் அள்ளலாம்!
*****
சண்டை
காவிரிக்காக
சண்டை போடுவார்கள்
நம் தலைவர்கள்
யார் முதலில்
அவளைத் துய்ப்பதென
அல்லது
வனப்பு குறைந்து விட்ட
காவிரியை
எந்தத்  தலைவன்
சைட் அடிப்பான்?!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...