22 Mar 2017

பகலையும் இரவையும் அவமதித்தல்


பகலையும் இரவையும் அவமதித்தல்
இந்த இரவை நீ அவமதித்து விட்டாய்
தூக்கத்தைக் கெடுத்து!
தூங்காத இரவில்
வெளிவர வாய்ப்பில்லாத
பயங்கர கனவின்
பிரசவ வேதனை காற்றில் கலக்கிறது!
துரத்தியடிக்கப்பட்ட குறட்டைச் சத்தம்
நாயின் கேவலாய் தெருவெங்கும் அலைகிறது!
சூரியன் விழிக்கும்
காலைப் பொழுதில் உறங்கச் செல்கிறாய்
இரவில் வராத உறக்கம்
பகலில் வந்தது என!
உறங்கிக் கழிக்கும் பகல் பொழுதில்
உனக்கான காட்சிகள்
உன்னைக் காணாமல்
ஊரெங்கும் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றன!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...