25 Mar 2017

ஏலாத பொழுதுகள்


வழி என்பது...
பிரிய மனமில்லை
வழியனுப்புவதைத் தவிர
வேறு வழியில்லை
வருடத்தில் இரண்டு நாள்கள்
வந்து தங்கிச் செல்லும் பேரன் பேத்திகளை
அந்த இரண்டு நாட்கள்
முடியும் வேளையில்!
*****

ஏலாத பொழுதுகள்
பிரிவென்பது உணர்ந்தால்
பிரிய மறுப்பாய்.
வலியென்பது உணர்ந்தால்
தாங்க மறுப்பாய்.
எல்லாம் நிகழ்த்தி விட்டு
கைகொட்டிச் சிரிக்கும்
சந்தர்ப்பங்களை என் செய்வாய்
எதுவும் செய்ய ஏலாத
என் அன்பே?!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...