26 Mar 2017

இன்றைக்கு அவ்வளவுதான்!


தோன்றாமல் போனது
கை நீட்டி வந்த உனக்கு
ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்று
தோணவே இல்லை
ஐந்து ரூபாய் எடுத்துப் போடத் தெரிந்த எனக்கு!
*****

இன்றைக்கு அவ்வளவுதான்!
ரெண்டு கூடை
மக்கும் குப்பை
அரை கூடை
மக்காத குப்பை
அதைத் தொடர்ந்து
ஒரு குழந்தை
இன்றைக்கு அவ்வளவுதான்
என்பது போல
விழுந்தது
அந்தக் குப்பைத் தொட்டியில்!
*****

அழகு
"பூம்பூம் மாடுன்னா
ரொம்பப் பிடிக்கும்!" என்று
தலையாட்டினாள்
அம்முக்குட்டி
பூம்பூம் மாட்டை விட
அழகாக!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...