1 Apr 2017

இடம்


இடம்
என் முதல் தனிமை
அங்குதான் ஆரம்பமானது
என்ற இடத்தில்
பரபர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது.
நண்பர்கள் கூடிப் பேசிய
தென்னந்தோப்பில்
செல்போன் டவர் இருக்கிறது
எவரெவர் பேச்சுகளையோ அனுப்பியபடி.
நான் பார்த்த இடம் என்று
நினைவுக்கு வரும்
எல்லாவற்றையும்
ஊடுருவ முடியாதபடி
மூடியிருக்கின்றன
காங்கிரீட் உறைகள்.
*****

தெரிந்து தெரியாதவன்
யாதும் ஊரே
என்றான்
பக்கத்து வீட்டில் இருப்பவனின்
பெயர் தெரியாத
பேஸ்புக் நண்பன்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...