26 Mar 2017

திருட்டு வாசம்


திருட்டு வாசம்
திருட்டுத்தனம் கண்டுவிட்ட
பூனை
தினம் ஒரு மீனோடு வருகிறது!
மூச்சை ஆழ இழுத்து
திருட்டு வாசம்
பிடித்துக் கொள்கிறேன் நான்!
*****

கவனிப்பு
ஏதோ ஒரு செய்தியை
சொல்ல விழையும் மனநோயாளியைக் கவனியாது
விரைந்து கொண்டிருக்கின்றன வாகனங்கள்.
விசேசமாய் ஒரு போஸ்டரோ, நோட்டீஸோ
ஒவ்வொரு நாளும்
சுவர்கள் மேல் ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வாரத்திற்கு ஒரு முறை
வாழ்த்து ப்ளெக்ஸ்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.
கவனித்தலுக்காகச் செய்யப்படும் ஒவ்வொன்றும்
கவனிப்பின்றிப் போய் விடுகின்றன
வேகத்தடையைப் பற்றிய அறிவிப்புப் பலகையைப் போல!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...