1 Apr 2017

கிண்டல் என்பது...


கிண்டல் என்பது...
வீட்டைத் தாண்டி
என்ன தெரியும் என்று
அம்மாவைக்
கிண்டல் செய்வார் அப்பா.
வீட்டைப் பற்றி
என்ன தெரியும் என்று
ஒரு போதும்
அப்பாவைக்
கிண்டல் செய்ய மாட்டாள்
அம்மா.
*****

அவள் பெயர்
நல்லா படிச்சு டாக்டராவேன்
என்று
பிள்ளை சொன்னதை நம்பி
காசநோயைப்
பெரிதுபடுத்தாமல் விட்டவள் பெயர்
அம்மா.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...