5 Mar 2017

எழுதுவது ஏனென்றால்...


எழுதுவது ஏனென்றால்...
நிறைய பேர் எழுதுகின்றார்கள்
என்பதால்
எழுதாமல் இருக்க முடியுமா?
என் கவிதையை
நீ மட்டுமாவது
எப்படியாவது படித்து விடுவாய்
என்பதற்காகவே
எழுதப்படுகின்றன
என் கவிதைகள்!
*****

ஆகி விட்டான்
எத்தனை காலம்தான்
பொறுக்கியாய்ப்
புறம்போக்காய்
இருப்பது என்றவன்
அரசியல்வாதியாகி விட்டான்!
*****

No comments:

Post a Comment