24 Mar 2017

பெண்ணெனப் பெண்


பெண்ணெனப் பெண்
பெண் உரிமை பற்றி
பேசும் அவள்
நட்டு நடு ராத்திரியில்
நைட் ஷோ சினிமா போய் வர
ரொம்பத்தான் யோசிக்கிறாள்.
பெண்ணுக்கென்ன பாதுகாப்பு
இருக்கிறது என்பவள்
வீட்டுக்குள் நுழைந்ததும்
தாழ் போட்டுக் கொள்கிறாள்.
வீட்டு வேலைப் பார்க்கும் பெண்ணை
அம்மா வந்து அழைப்பதற்கு முன்னே
கிளம்பு என்று ராப்பொழுதில்
வலுகட்டாயமாக அனுப்பி வைத்து
உறங்கச் செல்கிறாள்.
*****

ருசி
பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்
நம் பிரிவின் சந்திப்பை
தினம் தினம்
சொல்லிக் கொண்டே இருக்கிறது
தேநீர்க் கடையில்
நாம் பருகிய பார்வையின் ருசி!
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...