25 Mar 2017

நல்லது


நல்லது
மின்வெட்டு நல்லதா என்றால்
நல்லதுதான்!
இல்லையென்றால்
இந்த இரவில் என்னோடு பேச
உனக்கு நேரம் இருந்திருக்காது!
கொசுக்கடியும், புழுக்கமும்
உடம்பின் இருப்பை ஞாபகப்படுத்துகின்றன!
பிம்பங்களைக் கக்காத
தொலைக்காட்சியின் முன் நினைவலைகள் ஓடுகின்றன.
ஓய்ந்து கிடக்கும் எப்.எம்.கள் முன்
நம்மைப் பற்றிய பேச்சுத் தொடங்குகிறது.
நிலவும் நட்சத்திரங்களும்
நம்மை அமைதியாய்ப் பார்த்திருக்க
எனக்கென்னவோ பயமாய் இருக்கிறது
மீண்டும் மின்சாரம் வந்து
இவைகளையெல்லாம் கலைத்துப் போட்டு விடுமோ என!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...