19 Mar 2017

மனசுக்கு!


மனசுக்கு!
கழுத்தறுப்பட்டுத் துடிக்கும்
கோழியைக் கண்டும்
கோழிக்காலும்
கறிசோறும்
தின்ன ஆசையாயிருக்கிறது
நாக்கு ருசி கண்டு விட்ட
மனசுக்கு!
*****

கனவு
வண்டிக்காளை வைத்திருப்பவன்
மனசில்
ஒரு டாடா ஏஸ் வாங்கும்
கனவு இருக்கிறது.
*****

No comments:

Post a Comment