24 Mar 2017

மரபணு மாற்றம்


மரபணு மாற்றம்
அத்தனை இலைகளையும்
கிளைகளையும், வேர்களையும்,
காய்களையும், கனிகளையும்,
விதைகளையும்
ஒளித்து வைத்திருந்த விதையை
மரபணு மாற்றம்
செய்து விட்டதாகச் சொன்னார்கள்.
விதைப்பைத் தீர்மானித்த ஆண்டவர்களே,
உங்கள் விதைகள் வரும் வரை
பொறுத்திருக்க முடியாத
மரபிலிருக்கும்
மூன்று வேளை பசியையும்
ஏதாவது மாற்றம் செய்து விடுங்கள்!
போராடச் சொல்லித் தூண்டி விடும்
கனவில் வரும் விதைப்பாட்டையும்
நினைவில் நிற்கும் தாலாட்டையும்
உருவி எடுத்து விட்டு
எங்களை மோசம் செய்து மோட்சம் தந்து
ரட்சிப்பீர்கள் எசமானர்களே!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...