23 Mar 2017

அழுது தீரடா


அழுது தீரடா
உன் மின்சாரத்தை
வாங்கிக் கொண்டுதான்
மெழுகுவர்த்திக் கொடுக்கிறான்
பக்கத்து மாநிலக்காரன்
அது போல அழுது தீரடா
ஆற்றாமை தீர
உனக்கு இப்படியெல்லாம்
வரும் சோகம் தீர்ப்பதெனவே
உன் மாநிலத்துக்காரன்
திறந்த வைத்து இருக்கிறான்
டாஸ்மாக்
நன்றாக குடித்து விட்டு
வீதியில் சுருண்டு கிடடா
வீதியில் இறங்கிப் போராடாத என் தோழா!
உன்னைத் தூக்கி வருவதற்கென
உன்னைத் தூக்கிச் சுமப்பதற்கென
இருக்கிறாள்
நீ தாலி கட்டிய தர்மபத்தினி
கால்சிலம்பை விற்றுக் குடிக்கும்
கோவலன்களுக்காகக் காத்திருக்கும்
கண்ணகி போல!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...