7 Feb 2017

காவல்


உலகம்
சுட்டுப் போட்டாலும்
படிப்பு வராது
எனப்பட்டவர்கள்
எப்படியோ
படித்து விடுகிறார்கள்
உலகத்தை!
சொன்னவர்கள்தான்
கடைசி வரை
படிக்காமலே போய் விடுகிறார்கள்
உலகத்தை!
*****

ஆட்டம்
மரங்களிலிருந்து
விழுவதற்கு முன்
ஊஞ்சலாடிக் கொள்கின்றன
மழைத்துளிகள்!
*****

காவல்
கதவுகள்
மூடிய பின்னும்
வீடெங்கும்
நாயின் காவல்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...