4 Feb 2017

உயிர்ப்பு


சாவு
கள்ளச்சாராயம்
இருந்தால்
ஊரில் செத்திருப்பார்கள்
பத்துப் பத்தாக!
டாஸ்மாக்
இருப்பதால்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்
கொத்துக் கொத்தாக!
*****

உயிர்ப்பு
கோபம் தணிந்து
இறந்து விடுகிறது!
அதன் பின்
உயிர்த்தெழுகின்றன
சொல்லிய
வார்த்தைகள் ஒவ்வொன்றும்!
*****

முடிவு
ரயிலேறிச் சென்ற பின்
முடிந்திருந்தது
தற்கொலையெனச் சொல்லப்பட்ட
ஒரு காதல் கொலை!
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...