4 Feb 2017

கொலையா? தியாகமா? - எப்படி முடிவு செய்வீர்கள்?


கொலையா? தியாகமா? - எப்படி முடிவு செய்வீர்கள்?
            நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்தே கொலை தியாகமாகவும், தியாகம் கொலையாகவும் மாறுகிறது. மற்றபடி போன உயிர் போனதுதான்.
            இரண்டு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சண்டையில் உயிர் பிரிவதை கொலை என்பார்கள்.
            இரண்டு ஊர்களிடையே நடக்கும் சண்டையில் உயிர் பிரிவதை வீரம் என்பார்கள்.
            இரண்டு நாடுகளிடையே நடக்கும் சண்டையில் உயிர் பிரிவதை தியாகம் என்பார்கள்.
            எத்தனையோ உயிர்களைக் கொன்றாகி விட்டது. துடிக்க, துடிதுடிக்க, கொடூரமாக எப்படி எப்படியோ வகை தொகை இல்லாமல் கொன்று குவித்த பின்னும் மனித குலத்தைக் காக்கவே ஆயுதங்களைப் படைப்பதாக அதை படைப்பவர்கள் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
            யாரையும் கொல்லாமல் இருந்தால் அவர்கள் செத்துப் போய் விடுவார்கள். அநத அளவுக்கு வன்முறையில் மூழ்கிக் கிடக்கிறது மனித குலம்.
            சாவுக்காக இரக்கப்படுவதைப் போல நடித்துக் கொண்டே, அதை ரசித்துப் பார்க்க மனித மனங்கள் பயிற்றுவிக்கப்பட்டு விட்டன.
            சிறு ஈரத்தின் முன் பெரு நெருப்பு சரணடைவது போல உலகில் சில ஆச்சர்யங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
            வற்றிப் போனாலும் சரிதான், உலர்ந்துப் போனாலும் சரிதான் அன்பின் ஈரம் கொஞ்சம் எல்லார்க்கும் தேவைப்படுகிறது, ஹிட்லர் உட்பட எவர்க்கும். அந்தத் தேவையால்தான் ஆயுதங்களுக்கும் மத்தியில் நம்பிக்கையோடு பூக்கின்றன ரோஜாக்கள்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...