7 Feb 2017

ஒற்றை


ருசி
ஒவ்வொரு லட்டாய்ப்
பார்த்துக் கொண்டு இருக்கிறான்
சின்ன கண்ணன்
திருடித் தின்ற
லட்டின் ருசி
எந்த லட்டில்
இருக்கும் என்று!
*****

ஒற்றை
வாரத்திற்கு இரண்டு
நெற்றுத் தேங்காய்களைத்
தள்ளி விடும்
பின் காய்த்துக் கொள்ளும்
எப்போதேனும்
மரமேறி திருடிக் கொண்டாலும்
எதுவும் சொல்லாமல்
காற்றில் அசைந்து கொண்டிருக்கும்
மனித வாடையை நுகர்ந்து விட்ட
பெரும் திருப்தியோடு
பறிப்பார் இலாத
பக்கத்து வீட்டு
ஒற்றைத் தென்னை மரம்!
*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...