4 Feb 2017

திருப்தி


திருப்தி
செய்வதெல்லாம்
தப்புத் தப்பாய்ப் போவதாய்த்
திட்டித் தீர்க்கிறார்
மேனேஜர்!
வாங்கி வரச் சொன்னதை
மறந்து விட்டுப் போனதற்காக
எப்படிக் குடும்பம் நடத்துவது என்று
எரிந்து விழுகிறாள்
மனைவி!
தவணையைக் கட்டு
இல்லேன்னா
வண்டியைத் தூக்கிட்டுப் போயிடுவேன்
என்று மிரட்டுகிறான்
தண்டல்காரன்!
விரக்தியின் விளிம்பில்
இருக்கும் அவன்
ஒரு செல்பி எடுத்து
பேஸ்புக்கில் போடுகிறான்.
கொஞ்சம் திருப்தியாய் இருக்கிறது
வாழ்க்கை!
*****

பாஷை
கழிவறைக்
கரிச் சித்திரங்களைப்
பார்க்கையில்
சிரித்துக் கொள்வாயாக
ஆதிமனிதனின் பரிபாஷையென!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...