5 Feb 2017

இதுவும் ஒரு விளையாட்டு


கடவுள்
குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்று
சொல்லி முடிப்பதற்குள்
அடம் பிடிக்க
ஆரம்பித்து விடுகிறார்
கடவுள்!
*****

பெரியவனாதல்
"எப்பப்பா நான்
பெரியவனாவேன்?" என்று
ஆசையோடு கேட்டவனை
அடுத்த நாளே
பெரியவனாக்கி விட்டார்கள்
எல்.கே.ஜி. அட்மிஷன் போட்டு!
*****

இதுவும் ஒரு விளையாட்டு
கிரிக்கெட்
தெரியாத ஊரில்
கிட்டிப்புள் விளையாடப்படுகிறது!
கிரிக்கெட்
புகுந்த ஊர்களில்
ஒரு நாள் பயிலரங்குகளில்
விளையாடக் கற்றுத் தரப்படுகிறது
கிட்டிப்புள்!
*****

No comments:

Post a Comment