17 Feb 2017

ஊழல் எனும் பொதுவுடைமைத் திட்டம்


ஊழல் எனும் பொதுவுடைமைத் திட்டம்
            மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு நிதி ஒரு தடைக்கல்லாக இருப்பதாகச் சொல்லப்படும் நாட்டில்தான் தலைவர்கள் கோடிக் கணக்கிலும், லட்சம் கோடிக் கணக்கிலும் ஊழல் செய்கிறார்கள்.
            இதில் எல்லாவற்றிலும் வேடிக்கையாக அப்படி ஊழல் செய்தவர்களையே மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகிறார்கள். அல்லது அவர்கள் அப்படி அமர்த்தும் வகையில் தேர்தல் நடைமுறைகள் இருக்கின்றன.
            தேர்தலில் ஊழல் செய்த அரசியல்வாதி, அவரை எதிர்த்து நிற்கும் நேர்மையான அரசியல்வாதி ஒரே ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் வெற்றி பெற்றவராகி விடுகிறார். அந்த ஒரே ஒரு வாக்கு அவரை மீண்டும் ஊழல் செய்வதற்கு சட்டப்பூர்வமாக மீண்டும் அரியணையில் அமர்த்த காரணமாகி விடுகிறது.
            இதனால் ஊழல் செய்த அரசியல்வாதியை எதிர்த்துப் போட்டியிட்ட, நேர்மையான அரசியல்வாதி மீண்டும் ஐந்து ஆண்டுகள் காத்திருந்து அவருக்கு எதிராகப் போட்டியிட வேண்டியதாகிறது.
            அந்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஊழல் செய்த அரசியல்வாதி மீண்டும் பல பல ஊழல்களைப் புரிந்து பணபலத்தையும், அதிகார பலத்தையும் பெருக்கிக் கொண்டு மறு தேர்தலிலும் அவைகளின் துணையோடு எளிதாக வென்று விடுகிறார்.
            ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா என்ற மோசமான துர்நாற்றம் வீசுகிறது. அதற்கு எதிரான தூர் வாருதல் பெயர் அளவுக்கேச் செய்யப்படுகிறது.
            வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடா என்பது ஜனநாயக் கறை. அங்கிருந்துதான் அந்த ஊழல் அரசியல்வாதிகள் ஊழல் என்பதை சாமானியனுக்கும் உரித்ததாக உணரச் செய்து, ஊழல் என்பதை கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை, அடிப்படையிலிருந்து உச்சி வரை சட்டப்பூர்வமானது போல் அனைவரையும் உணர வைக்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...