கனவு காணாமல் இருங்கள் பார்ப்போம்!
கனவு காணுங்கள் என்கிறார்கள். அப்போதுதான்
முன்னேற முடியும் என்கிறார்கள்.
இப்படி எல்லாவற்றையும், உச்சா போவதிலிருந்து,
மலம் கழிப்பது வரை செய்யுங்கள் என்று முக்கிக் கொண்டு இருக்கச் சொல்கிறார்கள்.
உறங்கினால் கனவு வரப் போகிறது! அவர்கள்
சொல்வதைப் பார்த்தால் கனவு வருவதற்கு ஏதேனும் மருந்து, மாத்திரை வைத்திருப்பார்களோ
என்னவோ?
கனவு காணாத மனிதனை நீங்கள் காண முடியாது.
தம் பிடித்து, மன இறுக்கத்தோடு செய்யப்படுபவைகளே
முயற்சிகள் என்ற சித்தாந்தம் பதிந்து விட்டச் சமூகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சந்தை
சார்ந்த சரக்குப் பொருள்தான் கனவு காணுங்கள் என்பது.
இதை மையமாக வைத்தே இந்த பூமியில், பூமி
கொள்ளாத அளவுக்கு தன்னம்பிக்கை புத்தகங்கள் விற்பனை ஆகின்றன.
எல்லார்க்கும் எல்லாம் கிடைக்காது என்பதை
நாசுக்காக சொல்லி, ஏகாதிபத்தியத் தன்மையோடு வாய்ப்புகளைச் சுரண்டி வைத்து கையூட்டுக்கு
அதை விலை பேசும் நிலவியல் பகுதிகளில் மக்களை தணிவிக்க இந்த மந்திரமே பயன்படுத்தப்படுகிறது
பில்லி சூன்யத்தைப் போல.
இதை நீங்கள் மறுப்பீர்களானால், உங்களுக்கு
ஒரு சவால் விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வேண்டுமானால், கனவு காணாமல் இருந்து
பாருங்கள் பார்ப்போம். அதற்குதான் முயற்சி தேவைப்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
*****
No comments:
Post a Comment