3 Feb 2017

பசி பார்த்தல் மற்றும் கேட்டல்


சி பார்த்தல் மற்றும் கேட்டல்
"பசியைப் பார்க்க முடியாது
கேட்க முடியாது!" என்றான்
பசியோடிருந்தவன்.
பசியைக் காட்டினால்
நூறு ரூபாய் தருவதாக
சொன்னான் பெருத்தத் தொந்திக்காரன்!
"நூறு ரூபாயைத் தா!" என
வாங்கிக் கொண்டு
ஓட ஆரம்பித்தான்
பசியோடிருந்தவன்.
துரத்தி ஓடத் துவங்கினான்
தொந்திக்காரன்.
எட்டுத் தெருக்கள்
சுற்றிய பின் நின்று
பசியோடிருந்தவன் கேட்டான்,
"இப்போது தெரிகிறதா
இப்போது கேட்கிறதா
பசி?"
கேட்ட மாத்திரத்தில்
மயங்கி விழுந்து கொண்டிருந்தான்
பெருத்தத் தொந்திக்காரன்.
*****

மாற்றம்
கண்டனம்
தெரிவிக்கும் வகையில்
கருப்பாக மாறுகிறது
சாக்கடை வந்த பிறகு
பச்சையாக இருந்த குளம்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...