1 Mar 2017

பயம்


யம்
எப்போதாவது
வழி தவறி வந்து விடும்
பாம்புக்குத் தெரியாது,
ஒவ்வொரு முறையும்
அது வந்து விட்டது போல
நாம் பயப்படுவது!
*****

பேச்சு
கட்டுக்கட்டாய்
கடிதங்கள் இருந்தாலும்
ரெண்டு வார்த்தை
பேசாமல் செல்ல மாட்டார்
தபால்காரர்!
இப்போது, செம்பு நிறையத் தண்ணீரில்
தாகம் தணித்துக் கொண்டு
நிறைய பேசிக் கொண்டிருக்கிறார்
கடிதங்கள் குறைந்து விட்ட
ஏக்கத்தை!
*****

No comments:

Post a Comment

இயற்கையின் இரண்டு செய்திகள்

இயற்கையின் இரண்டு செய்திகள் 1. திணிப்பது எடுபடாது வாழ்க்கையில் அடக்குமுறைக்கு வேலை இல்லை. அடக்குமுறைக்கான அவசியம் ஏற்படுகிறது என்றால் அங...