கணிசமான எதிர்ப்பு
ஜல்லிக்கட்டு,
ரூபெல்லா தடுப்பூசி,
மீத்தேன் திட்டம்,
தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று
மக்கள் தங்கள் எதிர்ப்புகளை கணிசமாக பதிவு செய்கிறார்கள், போராடுகிறார்கள்.
இந்த எதிர்ப்புகள் சட்டப் பேரவையிலோ,
நாடாளுமன்றத்திலோ இதே வகையில் பிரதிபலிக்கப்படுவதில்லை. நமது மக்கள் பிரதிநிதிகள்தான்
அங்கு இருக்கிறார்கள். அவர்கள் மக்களின் கருத்துகள் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக
இருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த மக்கள்
பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தது நம் மக்கள்தான்.
இனி ஓட்டு கேட்டு வரும் மக்கள் பிரதிநிதிகளோடு
விவாதிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாக ஆசைப்படும் அனைவரையும் ஒரு மேடையில் அமரச்
செய்து மக்கள் கருத்து குறித்து அவர்களை விவாதிக்கச் சொல்ல வேண்டும்.
சுதந்திரமாகவும், சுயலாபம் பாராதும் தங்கள்
கருத்துகளை அவர்கள் முன் வைக்கிறார்களா என பார்க்க வேண்டும். பிறகு அவர்களை மக்கள்
பிரதிநிதிகளாக ஆக்குவது குறித்து மக்கள் பரிசீலிக்கலாம்.
இப்போதுள்ள சூழ்நிலையில் தங்கள் தொகுதி
பிரச்சனை குறித்தும், ஆட்சி குறித்தும் மக்கள் பிரதிநிதிகள் என்ன கருத்துக் கொண்டு
இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியாத நிலையில் இம்முயற்சி ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.
*****
No comments:
Post a Comment