5 Feb 2017

வலியைக் கொண்டாடுங்கள்!


வலியைக் கொண்டாடுங்கள்!
            வலிக்கிறது என்று கவலைப்படாதீர்கள்! வலியைக் கொண்டாடுங்கள். இன்னும் உணர்வு இருக்கிறது என்பதற்கான அடையாளம் அது.
            உணர்ச்சியற்ற தோலில் வலி இருப்பதில்லை. அது ஒரு நோயின் அறிகுறியாகி விடுகிறது. தாங்க முடியாத அளவிற்கு ஒரு வலி செல்கிறது என்றால் உணர்வின் கடைக்கோடி நிலையில் நாம் இருப்பதாக அர்த்தம்.
            ஆரம்பத்தில் மென்மையாக வலி துவங்கிய போதே நாம் உணர்ந்திருக்க வேண்டும். அதை அலட்சியப்படுத்தியிருக்கிறோம் என்பதைத்தான் தாங்க முடியாத வலி உணர்த்துகிறது.
            ஆக, உணர்வுடையவர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நம் வலியைக் கொண்டுதான் உணர முடியும். வலிகள் ஆரம்பத்தில் எழும் போதே துல்லியமாக உணர வேண்டியது உயிர்ப்புள்ள ஒன்றின் அடிப்படையாகும்.
            No pain, no gain என்பது உணர்வின் பழமொழி. உணர்ந்தவர்களே பலனைப் பெற முடியும் என்பது அதன் பொருள். வலியை உணர்ந்தவர்களைத்தானே உணர்ந்தவர்களாக கொள்ள முடியும். வலியின் துல்லியத்தில் உயிர்த்தன்மை கூடுகிறது. கூடும் உயிர்த்தன்மை பலனைக் கூட்டுகிறது.
            இயங்குபவர்களுக்கே வலி தோன்றும். அந்த வலியை அவர்கள் உணர்வார்கள். இயங்காதவர்களுக்கு என்ன வலி தோன்றப் போகிறது? அவர்கள் சவம். சவத்திற்கு எங்கே வலிக்கப் போகிறது?
            காலில் குத்திய முள்ளை உணரா விட்டால், காலிலே தங்கி விடாதா என்ன?
            இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ரணகளமாகி விட்டது என்று நீங்கள் இதை படித்து விட்டுச் சொன்னால், சத்தியமாக, என் நண்பரே! நீங்கள் என் எழுத்துகளை நிறைய படிக்க வேண்டும், வேறு வழியில்லை!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...