5 Feb 2017

அழுகை


அழுகை
சாக்லெட் கேட்டு
அழுத குழந்தை
அழுதது
அது எங்கோ
தவறி விழுந்ததுக்கு!
*****

நடுதல்
அசோகரைப் போல்
சாலையோரம்
மயங்கி விழும்
மனிதர்களை
நட்டுக் கொண்டு போகிறது
டாஸ்மாக்!
*****

தேடல்
இறந்து பின்னும்
பிணவறையில்
ஒவ்வொரு முகமாய்த்
தேட வைக்கிறான்
ஏழைத் தாய் வளர்த்த
செல்ல மகன்!
*****

No comments:

Post a Comment