12 Feb 2017

கங்கை - காவிரி - கிரானைட் திட்டம்


கங்கை - காவிரி - கிரானைட் திட்டம்
            நதிநீர்ப் பிரச்சனை மற்றும் வறட்சிக்குத் தீர்வாக கங்கை - காவிரி இணைப்பைப் பற்றிப் பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது அநேகமாக அது குறித்து யாரும் பேசுவதில்லை.
            அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூட இது குறித்து வலியுறுத்தி வந்தார். அவருக்கு முன்பாக மகாகவி பாரதி வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்றெல்லாம் பாடியிருக்கிறார்.
            கங்கை - காவிரி இணைப்பு வரைபடத்தை அப்போது ஊடகங்களில் வரைந்து காட்டிய கால கட்டமெல்லாம் உண்டு. பின்பு, அதெல்லாம் சாத்தியமாகாத செலவு பிடிக்கும் வேலை என்று விட்டு விட்டார்கள்.
            தொழில் நுட்பம் மிகுந்து விட்ட இக்காலக்கட்டத்தில் கங்கை - காவிரி இணைப்புக் கால்வாயை வெட்டுவது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அப்படியே அது ஒரு பெரிய பிரச்சனை என்றாலும் வாட்ஸ் அப்பில் அந்த வரைபடத்தை வெளியிட்டு அந்த இடங்களில் எல்லாம் கிரானைட் இருக்கிறது என்று பரப்பி விட்டால், அரசியல்வாதிகளும், அவர்களோடு தொடர்புடைய கான்ட்ராக்டர்களும் வெட்டி எடுத்து விட மாட்டார்கள்? கங்கையை காவிரியோடு என்ன, உலகத்து நதிகளோடு எல்லாம் இணைத்து விடுவார்கள். அந்த கிரானைட் விசயம்தான் இதில் முக்கியம். ஒட்டு மொத்த இந்தியாவையும் வெட்டி எடுத்து விடுவார்கள்.
*****

No comments:

Post a Comment