12 Feb 2017

சிரிக்கும் கொசுக்கள்


சிரிக்கும் கொசுக்கள்
ப்ளாஸ்டிக் டப்பாக்களைக்
குப்புறப் போட்டவன்
டயர்களை
அப்புறப்படுத்தினான்.
தேங்காய் சிரட்டைகளை
திருப்பிப் போட்டவன்
வீதியெங்கும்
தேங்கிக் கிடந்த தண்ணீரை
என்ன செய்வதென்று தெரியாமல்
தெருவில் இறங்கி நடந்தான்.
டெங்குக் கொசுக்கள்
கைதட்டிச் சிரித்தன!
*****

மீண்டும் ஏரி
ஏரியிலிருந்து
ப்ளாட் போட்ட
இடங்களை எல்லாம்
மீண்டும் ஏரியாக்கியது
கொட்டித் தீர்த்த
மழை!
*****

No comments:

Post a Comment