6 Feb 2017

பரிசுத்த ஆவி மன்னிப்பதாக!


பரிசுத்த ஆவி மன்னிப்பதாக!
            குறைந்தபட்சம் இந்தக் கல்வி அறத்தை கொஞ்சமேனும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் மனதிலாவது அதை கொஞ்சமேனும் நிலைநிறுத்தி இருக்க வேண்டும்!
            செய்ததா?
            செய்திருந்தால்...
            கிராமத்துப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் ஏன் மாறுதல் கேட்டுக் கொண்டு நகரத்தை நோக்கிப் படையெடுக்க வேண்டும்?
            காலை 9.30 க்கு துவங்கும் பள்ளிக்கு 10.00 மணியிலிருந்து 12.00 மணி வரை தாங்கள் இஷ்டப்பட்ட நேரத்தில் ஏன் வர வேண்டும்?
            மாலை 4.30 க்கு விட வேண்டிய பள்ளியை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் தாங்கள் விருப்பப்பட்ட ஒரு நேரத்தில் விட்டு விட்டு ஏன் ஓட வேண்டும்?
            தன் பிள்ளையை தன்னுடைய அரசுப் பள்ளியை விட்டு விட்டு, ஏன் தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும்?
            சில நாள்களில் பள்ளிக்கு வராமலே, பள்ளிக்கு வந்தது போல ஏன் கையொப்பம் இட வேண்டும்?
            தனக்குள்ள உரிமை என்ற பெயரில் தேவையில்லாமலும் அதற்கான அவசிமும் இல்லாமலும் மருத்துவ விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு என்று இருக்கின்ற விடுப்புகளையெல்லாம் தனக்கான ஏகபோக சலுகைகள் என்ற பெயரில் ஏன் எடுத்துத் தள்ள வேண்டும்?
            நான் மட்டும் வேலை பார்த்து நாடா திருந்தப் போகிறது என்று தான் பணியாற்றாமல் ஒப்பேற்றுவதோடு, மற்றவர்களிடமும் இதே சித்தாந்தத்தைக் கூறி நாம் மட்டும் வேலை பார்த்து நாடா திருந்தப் போகிறது என அவர்களையும் ஏன் அணி சேர்க்க வேண்டும்?
            கற்பிக்கும் உயர்வான இந்த ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு, அதை உப தொழிலாகக் கருதிக் கொண்டு, பின்வரும் தொழில்களை ஏன் முதன்மைத் தொழிலாகச் செய்ய வேண்டும்?
            ஏன் வட்டிக்கு விட்டு சம்பாதிக்க வேண்டும்?
            ஏன் ரியல் எஸ்டேட் புரோக்கராக வேண்டும்?
            ஏன் இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டாக வேண்டும்?
            ஏன் தனிப்பயிற்சி வைத்து சம்பாதிக்க வேண்டும்?
            கேட்டால் ஆசிரியர்கள் மட்டும் பரிசுத்தமாக இருக்க வேண்டுமா? என்பார்கள். மற்றவர்களெல்லாம் எப்படி வேண்டுமானால் இருக்கலாமா? என்பார்கள்.
            அது சரி ஆசிரியர்களே பரிசுத்தமாக இல்லாவிட்டால் எப்படி?
            பரிசுத்த ஆவி எல்லாவற்றையும் மன்னிக்காது!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...