6 Feb 2017

ஒரு கதை சொன்னோம்!


மதிப்பு
ஒரு காசோலையை
வைத்த பின்னர்
மதிப்பு மிக்கதாகிறது
புத்தகம்!
காசோலையின் உறையாகிவிட்ட
புத்தகத்தைக்
கவனம் கலையாது
மதிப்போடு
எடுத்துச் செல்ல வேண்டியதாகிறது
செல்லுமிடம் எங்கும்!
காசோலை
வங்கியில் போடப்பட்ட பின்
செல்லா காசாகி விடுகிறது
புத்தகம்!
*****

ஒரு கதை சொன்னோம்!
தூர்த்து விட்ட
குளத்திற்கு
ஒரு கதை சொன்னோம்,
கண்ணாடித் தொட்டிகளில்
வாழப் பழகி விட்டன
மீன்கள் என்று!
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...