23 Feb 2017

வெள்ளம் பாதித்த கவிதைகள்


வெள்ளம் பாதித்த கவிதைகள்
ஏரியின் கரைகளை
உடைத்தன
கொட்டிய குப்பைகள்!

பெருவெள்ளம் ஓடிய
சுவடு தெரியாமல்
தண்ணீர்ப் பஞ்சத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறது
மாநகர வாழ்க்கை!

பாதை தெரியாமல்
ஓடுகிறது
என
கோபப்பட முடியவில்லை
மழை வெள்ளத்திடம்!

சாவு
வரும் போது
எதையும்
எடுத்துக் கொண்டு
போக முடியாது!
பெரும் வெள்ளம்
வரும் போதும்
அப்படியே!

பெருவெள்ளம்
அடித்துக் கொண்டு போனது
குடோனில் இருந்து
ஐம்பதாயிரம்
வாட்டர் பாட்டில்களையும்!

எல்லாவற்றையும்
அடித்துச் சென்ற
பெருவெள்ளம்
மிச்சம்
வைத்து விட்டுச் செல்கிறது
தாகத்தை!

படகில் செல்ல வேண்டும்
என்ற ஆசை
எப்படியே நிறைவேறியது
பெருவெள்ள மீட்பில்!

இனி
ஹெலிஹாப்டர்
பார்க்கும் போதெல்லாம்
வரும்
பெருவெள்ள ஞாபகம்!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...