23 Feb 2017

ஆடிஷன்


ரெண்டாயிரம் நோட்டு
வழக்கமாக சில்லரைக்கு சாக்லேட்டுகளை நீட்டும் முட்டுச் சந்து கடைக்காரர்தான் சரிபட்டு வருவார் என எடுத்து நீட்டினேன் ரெண்டாயிரம் நோட்டை.
*****
ஆடிஷன்
இன்று பேய் கேரக்டருக்கு ஆடிஷனக்கு வந்தவள் மூன்று நாள்களுக்கு முன் இறந்து போயிருந்த செய்தி கேட்டு பேய் பிடித்தது போலானார் டைரக்டர் சாமியப்பன்.
*****
சில்லரை
ஏ.டி.எம்.இல் எடுத்த ரெண்டாயிரத்தை வைத்துக் கொண்டு சில்லரையாக கொடுக்க முடியாமல் மாளிகைக் கடையில் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தார் பேருந்தில் சில்லரையாகக் கொடுங்கள் என்று எரிந்து விழும் கண்டக்டர் கந்தசாமி.
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...