3 Feb 2017

ரசனையற்ற வாழ்க்கை


ரசனையற்ற வாழ்க்கை
மறுபடியும் வந்த
மழையை
ரசிக்க முடியவில்லை!
பெய்து தொலை என்று
நனைய விருப்பம் இல்லை!
வீட்டுக்குள்ளே
அடைந்து கொண்டோம்!
நாம்
நனைய வரவில்லை
என்பது தெரிந்தும்
பெய்து கொண்டே இருக்கிறது
ரசனையற்ற மழை!
*****

பயன்
கனிகளால்
நிறைந்த மரம்
பயன் அற்று நிற்கிறது
பயன் கொத்திச்
செல்கின்றன
பறவைகள்!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...