4 Feb 2017

ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்


ஒரு தலைமுறை
    “பேத்தி பிறந்த ராசி!” என்று சந்தோசப்பட்டுக் கொண்டார் நாராயணன், மகள் பிறந்த போது தொடரப்பட்ட வழக்கில் விடுதலையானதற்கு!

ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்
    கல்யாணமாகி முதல் நாளே மாப்பிள்ளை அடிப்பதாக மகள் போன் செய்ததும், அன்றோடு மனைவியை அடிப்பதை நிறுத்திக் கொண்டார் ரங்கராஜன்.

முகவரி
    “அட்ரஸ் ப்ரூப்” என்ற ஆபீஸரிடம், தான் இருக்கும் ப்ளாட்பாரத்தில் எடுத்துக் கொண்ட செல்பியைக் காட்டினான் பழனி.

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...