2 Feb 2017

புரண்டு படுத்தல்


புரண்டு படுத்தல்
அடித்துத் துவைத்து
நனைத்து
அலசிப் போட்ட
மழையைத் தொடர்ந்து
காய வைக்க
வெயில் அடிக்கிறது!
மழையோ
வெயிலோ
எந்த பிரக்ஞையுமின்றி
பொழுது போகவில்லை
என்று
புரண்டு படுத்துக் கொள்கிறோம்
நாம்!
வீட்டிற்கு வெளியே
மறுபடி துவங்குகிறது
பெருமழை!
*****

எச்சரிக்கை
எந்தப் பாறையையும்
சிற்பமாக்க
மனமில்லை
பாறையின் அழகை
ரசித்த பின்!
பின்னொரு சிற்பியைக்
கண்ட போது
எச்சரித்தேன்
பாறையின் அழகு
புரியாது
அதை
சிற்பமாக்கி விடாதே
என்று!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...