23 Feb 2017

சுரத்து


சுரத்து
முன்பொரு காலத்தின்
அழகுப் பெண்ணொருத்தி
முகம் சுருங்கி
முடி நரைத்து வருகிறாள்.
அவளைப் பார்க்கக் கூட தோன்றாமல்
தேநீர்க் கடையில்
இளைஞர்கள் நிற்கிறார்கள்.
கள்ளப்பார்வைப் பார்க்கும்
கனவான்களும்
கவனமின்றி இருக்கிறார்கள்.
அவள்
முக அழகிற்கான பசையையும்
முடி மாற்றத்திற்கான கருப்பு மசியையும்
சுரத்தின்றி
எடுத்துக் கொடுத்த
பெட்டிக்கடைக்காரரிடமிருந்து
வாங்கிக் கொண்டு புறப்படுகிறாள்!
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...