24 Feb 2017

வந்து விடும் ஏரி


வந்து விடும் ஏரி
ஏரியைத் தூர்த்து
வீடு கட்டுபவர்களே
யோசியுங்கள்
வீட்டுக்குள் ஒரு நாள்
வந்து விடும்
ஏரி
மழை வெள்ளமாய் மாறி!
*****

தீர்மானம்
எதுவும் எழுதுவதற்கில்லை
எழுதுகோலோ அல்லது தட்டச்சுப் பலகையோ
அதுவாகத் தீர்மானித்துக் கொள்ளட்டும்
உறங்கிக் கொண்டிருக்கும்
எழுத்துகளை!
*****

No comments:

Post a Comment