8 Feb 2017

திருட்டு


திருட்டு
என்னடா இருக்கு எங்கிட்டேன்னு
திருட்டு பயமில்லாம
நடந்துகிட்டு இருந்தான் அவன்!
ரெண்டு கிட்னி
ரெண்டு கண்
ஒரு கல்லீரல் இருக்குன்னு
திருடிகிட்டுப் போய்ட்டாங்க
அவனை!
*****

இருக்கு
கோழிக்குப் பண்ணை இருக்கு
மீனுக்கு வளர்ப்புக் குட்டை இருக்கு
ஆட்டுக்குப் பட்டி இருக்கு
நாய்க்கு வீட்டோரம் இடம் இருக்கு
பன்றிக்கு ஊரெல்லாம் சாக்கடை இருக்கு
பாவம் தவளைக்கு
ஒரு குளம் இல்லை
இருந்த குளம் மேல்
கட்டுன ப்ளாட்டுதான் இருக்கு!
*****

No comments:

Post a Comment