2 Feb 2017

தானத்தில் சிறந்தது!


தானத்தில் சிறந்தது!
            "தானத்தில் சிறந்தது!" என்ற தலைப்பில்  மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடந்தது.
            தானத்தில் சிறந்தது, கண்தானம், இரத்ததானம், உடல்தானம், உறுப்புத் தானம், அன்னதானம் என்று ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் கருத்துகளை தலைப்பை ஒட்டி ஆணித்தரமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்க, "தானத்தில் சிறந்தது நிதானம்!" என்று ஒரு வரியைப் பேசிச் சென்ற மாணவர் முதல் பரிசைப் பெற்றுச் சென்றார். எப்போதும் முருகனுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பை விட, விநாயகருக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை அந்தக் கூட்டத்தில் அந்த மாணவரும் நிரூபித்தார் என்று நினைத்துக் கொண்டேன்.
            உண்மைதான், நிதானம் பிரதானம்.
            கிராமத்தில் பெரியவர்கள் கூட சொல்வார்கள்,
"பறந்து பறந்து பத்து வாய் திங்குறதுக்கு, இருந்து ஒரு வாய் திங்குறது மேல்!" என்று.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...