2 Feb 2017

நிலா தோசை


சிகிச்சை
மொத்த சமூகத்திற்கும்
சிகிச்சை
செய்யாது
ஒரு பைத்தியத்தைத்
தெளிவிக்க முடியாது
என்பது
தெரிந்த பின்
சிகிச்சை தொடர்ந்து கொண்டே
இருக்கிறது
பைத்தியத்தின் பைத்தியம்
குணமாகி விடாதபடி!
*****

நிலா தோசை
பார்ப்பதற்கு
தோசை போல இருப்பதால்
மென்று தின்று
விட வேண்டும்
என்கிறாள் மகள்
நிலாவை!
"அமாவாசை வரை பொறு!
மாவரைத்து
தோசை ஊற்றித் தருகிறேன்!"
என்கிறாள்
அம்மா!
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...