15 Feb 2017

இன்ஜினியரிங் காலேஜூக்கு மாற்று


இன்ஜினியரிங் காலேஜூக்கு மாற்று
            யார் யாரோ சொன்னார்கள் என்று இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்த சமத்து சம்புலிங்கம் ஏகப்பட்ட மனவருத்தத்தில் இருந்தார்.
அவர் அப்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி. போகிற மாணவர்கள் கூட இன்ஜினியரிங் காலேஜூக்குத்தான் போய்க் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டு இருந்தார்.
            அதற்குப் பிறகுதான் எல்.கே.ஜி., யு.கே.ஜி.யெல்லாம் ஸ்கூல் படிப்புகள் என்பதும், இன்ஜினியரிங் என்பது காலேஜ் படிப்பது என்பதும் தெரிய வந்தது அவருக்கு.
            அதன் பிறகு அவர் இன்ஜினியரிங் காலேஜில் படிப்பதற்கு மாணவர்களை நுண்ணோக்கிக் கொண்டு தேட வேண்டிய துர்பாக்கியமான நிலையில் இருந்தார்.  நாளுக்கு நாள் பெருக வேண்டிய மாணவர் எண்ணிக்கை குறைந்து, குறைய வேண்டிய கஷ்ட நஷ்டம் பெருகிக் கொண்டு இருந்தது.
            "இப்படி காலேஜ் ஆரம்பித்ததுக்கு ஸ்கூல் ஆரம்பித்து இருக்க வேண்டும்! என்னை தவறாக வழிநடத்தி விட்டார்கள்!" என்று பார்ப்போரிடம் எல்லாம் புலம்பித் தள்ளிக் கொண்டு இருந்தார்.
            "கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன ஆகப் போகிறது?" என்று தன்னந்தனியாகப் புலம்பிய சம்புலிங்கம் "சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்கள்!" என்ற நடப்பு அரசியல் செய்தியைப் பார்த்து ஆர்வமானார்.
            தன் இன்ஜினியரிங் காலேஜூக்கு ஒரு விடிவு கிடைத்து விட்டதாக உற்சாகமானார்.
            மறுநாளே தான் ஆர்வமான தன் உற்சாகமான அந்த முடிவையும் வெளியிட்டார், "இன்ஜினியரிங் காலேஜை சொகுசு பங்களாவாக மாற்றப் போகிறேன்!"
            மேலும் அவர் நம்பிக்கையோடு சொன்னார், "எப்படியும் இன்ஜினியரிங் காலேஜில் போட்டப் பணத்தை சொகுசு பங்ளாவில் எடுத்து விடுவேன்!"
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...