15 Feb 2017

மழைநேயம்


மழைநேயம்
கடல்கோளால் அழிந்த
வரலாறு தெரிந்தும்
பெருவெள்ளத்துக்கான
முன்னெச்சரிக்கை
செய்யாமல் இருந்தோம்
நாம்!
பெருமழை வந்து
சிலநாள்கள் இருந்துப் பார்த்து
இங்கிருந்த மனிதநேயம் கண்டு
ஓடிப் போய் விட்டது
ஒரு சில நாள்களில்!
*****

உண்டு
மழையாகப் பார்த்து
நிறுத்தினால்தான் உண்டு,
பாவப்பட்ட
மனித வாழ்க்கை நமக்கு!
*****

No comments:

Post a Comment