2 Feb 2017

வெளிவராத கண்ணீர்


நாளை காதல் என்னாகுமோ?
ஒரு முத்தம்
காதலை உயிர்ப்பிக்கும்
என்று நினைக்கிறோம்,
முத்தத்தால் செய்த
காதல்கள் அறியாமல்!
சேர்ந்திருக்கும் நம் கரங்களில்
பிரிந்திருக்கும் உணர்வுகள்
மறைந்திருக்கின்றன
என்பது தெரிந்தும்
மனதோடு மனது
கலக்க நிரம்ப யோசிக்கிறோம்!
இன்று நம்
படுக்கையைப் பகிர்ந்து கொண்ட பின்
நாளை நம் காதல்
என்னாகுமோ?
*****

வெளிவராத கண்ணீர்
உருண்டு திரண்டு
வெளிவராத கண்ணீர்
மறுதலித்து விடுகிறது
மன்னிப்பை!
அது என்றென்றும்
மெளனத்தால் பிரசங்கம்
செய்து கொண்டிருக்கிறது
நம்பிக்கையின் மேல்
நிகழ்த்தப்பட்ட
மாபெரும் தப்பை!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...