18 Feb 2017

தமிழினத்தின் பாரம்பரியச் சொத்து


தமிழினத்தின் பாரம்பரியச் சொத்து
            ஜெ., சசி., சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக வந்துள்ள தீர்ப்பு குறித்து தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளைப் பார்க்கும் போது தூய்மையான அரசியலை அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பது தெரிய வருகிறது.
            இந்தத் தலைவர்களில் பலர் சில, பல நாட்களுக்கு முன்னதாக சசி.யைச் சந்தித்து அரசியலுக்கு வரவும், ஆட்சியமைக்கவும் தங்களின் மனப்பூர்வ சம்மதங்களைத் தந்தவர்கள் என்பதை மறக்க முடியாது.
            அவர்களில் ஒரு சிலர் ஆளுநர் சசி.யை ஆட்சியமைக்க விடாமல் தாமதப்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கருத்து கூறிய வகையிலும் அடங்குவர்.
            இன்று நிலைமை மாறி விட்டது என்றவுடன் அவர்களின் கருத்துகளும் மாறி விட்டன.
            தமிழ் மக்களின் மறதியின் மேல் வைத்துள்ள அவர்களின் நம்பிக்கையைப் பறைசாற்றுவதாகவே அவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. இதைச் சொல்லவும் யோசனையாகவே இருக்கிறது. இதைப் படித்து விட்டு இதை மறந்து விட தமிழர்களுக்கு  எத்தனை மில்லி செகண்டுகள் ஆகப் போகிறது?
            மறதி என்பது தமிழினத்தின் பாரம்பரியச் சொத்து!
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...