18 Feb 2017

மனிதம் எனும் தன்மை


மனிதம் எனும் தன்மை
அமெரிக்காவில்
கோபுரத் தாக்குதலும்
பிரான்சில்
வெடிகுண்டு தாக்குதலும்
மனிதத் தன்மையைக்
குழி தோண்டிப்
புதைத்து விடுமானால்
அதன் பேர்
மனிதத் தன்மை என்பீரோ?
கொல்லப்படுவதால்
கொல்லப்படுவதில்லை
மனிதத் தன்மை என்பதை
சுயநலமற்ற மனிதர்களே
அறிவார்கள்!
மனிதர்களைக் கொன்றே
மனிதத் தன்மையை நிரூபிப்பவர்கள்
பேராசையை மறைத்து வைக்கிறார்கள்
மனித குல நன்மை எனும் பிரசங்கத்தில்!
*****

உணர்தல்
வீசி எறிந்த பின்
உணரப்படுகிறது
வீசி எறிய வேண்டியது
கோபம் என்று!
*****

No comments:

Post a Comment

அது ஒரு பிரச்சனை!

அது ஒரு பிரச்சனை! அனிதாவுக்குப் பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இது போன்ற இந்தப் பிரச்சனைகளைக் கையாளுவது எப்போதும் குழப்பமே. ...