1 Mar 2017

நினைவூட்டல்


நினைவூட்டல்
பாலங்கள்
நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன
தன் கீழ் ஓடிய
நதிகளை!
*****

வசதிகள்
முதலில்
அம்பாள் நகர் ப்ளாட்டில்
வீடு கட்டியவருக்கு
வசதியாக இருந்தது,
வீடு கட்டப்படாமல் இருந்த
பக்கத்து ப்ளாட்!
அடுத்தடுத்த ஆண்டுகளில்
அடுத்தடுத்த ப்ளாட்டுகளில்
வீடுகள் கட்டப்பட
எல்லா வீடுகளுக்கும்
வசதியாக இருந்தது
அருகே இருந்த ஆறு
குப்பைகளைக் கொட்டவும்,
கழிவுநீரைக் கலந்து விடவும்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...