6 Feb 2017

ஆனந்த விகடனில் ஒரு கவிதை


சமத்தாக இருப்பது அவரவர் சாமர்த்தியம்
இனி பிச்சைக்காரர்கள்
இருக்கக் கூடாது என்று சொல்லி
அவர்களுக்கு இட்ட சோறில் நஞ்சிட்டாகி விட்டது.
இனி ஏழைகள்
இருக்கக் கூடாது என்று எண்ணி
அவர்கள் குடிசைகளுக்கு தீ வைத்தாகி விட்டது.
இனி நடுத்தர வர்க்கம்
இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு
அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பிடுங்கியாகி விட்டது.
இனி விவசாயிகள்
இருக்கக் கூடாது என்று சிந்தித்து
அவர்கள் நிலங்களைப் ப்ளாட் போட்டாகி விட்டது.
இனி சிறுவணிகர்கள்
இருக்கக் கூடாது என்று யோசித்து
ஆன்லைன் வர்த்தகத்தை அவிழ்த்து விட்டாகி விட்டது.
இனி சாமான்யர்கள், பாமரர்கள், சிறுபான்மையினர் என
எவரும் இருக்கக் கூடாது என்று ஆராய்ந்து
உயிர்த் தியாகம் என்ற முழக்கத்தை ஒலிக்க விட்டாகி விட்டது.
இனி இந்த தேசத்தில் இருக்க வேண்டியவர்கள்
மேட்டிமை குடிமக்களே
அவர்களின்
பட்டி ஆடுகளாகவோ,
கொட்டில் மாடுகளாகவோ,
காவல் நாய்களாகவோ
வாழ்ந்து கொள்வது அவரவர் சாமர்த்தியம்.
*****
- நன்றி ஆனந்த விகடன் (01.02.2017) இதழ்

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...