6 Feb 2017

அனுமதிகள்


மகள்
அப்பாவிடம்
பலூன் வாங்கிக் கேட்டவள்
தேவதைகளிடம்
சிறகுகளைக் கேட்டாள்!
*****

அனுமதிகள்
இந்த ஒருமுறை மட்டும்
என்று
ஓரு நாளில்
நான்காவது தடவை
பெர்மிஷனில் செல்கிறார்கள்
சின்னதுமாய்ப் பெரிதுமாய்
சைடு பிசினஸ் ஒன்றை
முடிந்து
வைத்துக் கொள்பவர்கள்!
*****

எடுப்பு
சிட்டுக் குருவிகளும்
கல் குருவிகளும்
அழிந்தொழிந்த ஊரில்
கவண்வில்லை
தூக்கி எறிந்தான்
ஆங்ரி பேர்ட்ஸை
கையிலெடுத்த
சிறுவன் ஒருவன்!
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...